என் மீட்பர் இயேசுவின் மேல்
என் நம்பிக்கை கொண்டிருப்பேன்
என்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவில்
நான் எதையும் செய்திடுவேன்
என் நம்பிக்கை கொண்டிருப்பேன்
என்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவில்
நான் எதையும் செய்திடுவேன்
1. பாவத்தில் பிறந்த என்னையும் அவர்
பரிசுத்த இரத்தத்தால் மீட்டார்
பரலோக வாழ்வில் பங்குபெற
பரிகார எனக்கவரே
பரிசுத்த இரத்தத்தால் மீட்டார்
பரலோக வாழ்வில் பங்குபெற
பரிகார எனக்கவரே
2. என் சத்ருக்களை வெட்கப்படுத்த
என் கொம்புகளை உயர்த்தினார்
அபிஷேகிக்கும் என் நாதரையே
அனுதினம் துதித்திடுவேன்
என் கொம்புகளை உயர்த்தினார்
அபிஷேகிக்கும் என் நாதரையே
அனுதினம் துதித்திடுவேன்
3. பரமதேவனின் பரிசுத்த பணியின்
பாதையில் உண்டான தடையை
நீக்கிட எனக்கு முன் தூதர்களை
நிறுத்தியே காத்திட்டாரே
பாதையில் உண்டான தடையை
நீக்கிட எனக்கு முன் தூதர்களை
நிறுத்தியே காத்திட்டாரே
4. தேவசித்தம் செய்யாமல் தடுக்கும்
தேவ பகைஞனைத் தோற்கடித்து
என் பெலனாகிய கர்த்தரினால்
என் வேலை முடித்திடுவேன்
தேவ பகைஞனைத் தோற்கடித்து
என் பெலனாகிய கர்த்தரினால்
என் வேலை முடித்திடுவேன்